
Cabinet Minister, Govt. of TN| GS (Election Campaign Management)@tvkvijayhq| MLA, Villivakkam| President @BFI_basketball |GS @TNOA_Offi |Founder @thevocofficial

மக்களின் குரலுக்குச் செவிசாய்க்கும், நேர்மையான, வெளிப்படையான மற்றும் மக்கள் நலன் சார்ந்த தலைவர்களே வில்லிவாக்கத்திற்குத் தேவை. எனவே, உங்களோடு எப்போதும் உடன் இருக்கும் விதமாக நமது வில்லிவாக்கம் குடும்பத்தினர் அனைவரையும் நெருக்கமாக இணைக்கும் உறவுப் பாலமாக இந்தத் தளம் செயல்படும்.



சென்னை மாநகரத்தின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டில் முக்கிய பங்களிப்பை வழங்கி வரும் சட்டமன்றத் தொகுதி வில்லிவாக்கம். நகரின் வரலாற்றுச் சிறப்புமிக்க தொகுதிகளில் ஒன்றான இது, ஒருகாலத்தில் இந்தியாவின் மிகப்பெரிய சட்டமன்றத் தொகுதியாக விளங்கியது. இன்றும் சமூக மற்றும் அரசியல் ரீதியாக மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடமாகத் திகழ்கிறது.
ஒருங்கிணைந்த ரயில் பெட்டித் தொழிற்சாலை , 'லோகோ ஒர்க்ஸ்' போன்ற தொழில் முயற்சிகளும், புகழ்பெற்ற அகத்தீஸ்வரர் கோவில் போன்ற வரலாற்றுச் சின்னங்களும் ஒருங்கே அமைந்துள்ள தொகுதியாக வில்லிவாக்கம் உள்ளது. இது தொழிற்துறை வளர்ச்சி மற்றும் கலாசார பாரம்பரியத்தின் தனித்துவமான இணைப்பைப் பிரதிபலிப்பதாக மக்கள் கொண்டாடுகிறார்கள்.
புதுமை, விடாமுயற்சி மற்றும் சமூக ஒற்றுமை ஆகியவற்றின் அடையாளம் என்ற தனிச்சிறப்பை கொண்டிருக்கிறது வில்லிவாக்கம்.
இன்று, பல்வேறு மொழி, கலாசார பின்னணிகளைச் சேர்ந்த மக்கள் ஒற்றுமையுடன் வாழும் "மினி இந்தியா" என வில்லிவாக்கம் போற்றப்படுகிறது. 'வேற்றுமையில் ஒற்றுமை' என்ற சிறப்போடும் ஒற்றுமை உணர்வோடும் வில்லிவாக்கம் மக்கள் அனைவரும் ஒரு குடும்பமாக வாழ்ந்து வருகிறார்கள்.

ஆதவ் அர்ஜூனா - வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராகவும், தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.
ஆதவ் அர்ஜூனா அடிப்படையில் ஒரு அரசியல் வியூக வகுப்பாளர், விளையாட்டு நிர்வாகி மற்றும் சமூக ஆர்வலரும் கூட. தற்போது, இந்தியக் கூடைப்பந்து கூட்டமைப்பின் தலைவராக பொறுப்பு வகிக்கிறார். “வாய்ஸ் ஆஃப் காமன்ஸ்” என்ற தேர்தல் வியூக நிறுவனத்தை நிறுவி, ‘அரசியலை அனைவருக்குமானதாக்கும்’ பணியில் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கிறார்.
விளையாட்டு, கல்வி மற்றும் மக்கள் மையப்படுத்தப்பட்ட நல்லாட்சியின் மூலம் சமூகத்தில் நேர்மறையான மாற்றத்தை உருவாக்க முடியும் என்ற உறுதியான நம்பிக்கையுடன் செயல்பட்டு வருகிறார்.
2026 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளராக, அக்கட்சியின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார்.

எண். 12/4, முதல் பிரதான சாலை, சிட்கோ நகர், வில்லிவாக்கம், சென்னை – 600049
தவெக ஆட்சியின் 100 நாட்கள் சாதனைகள்: மாநில உரிமைகளுக்கான சிறப்பு மாநாடு17.08.2026
சென்னை நேரு விளையாட்டரங்கில் புதுப்பிக்கப்பட்ட செயற்கை தடகளப் பாதை மற்றும் ஒருங்கிணைந்த விளையாட்டு வளாகம் திறப்பு விழா18.08.2026
சர்வதேச ஒலிம்பிக் தினம்23.06.2026
போதைப்பொருள் தூண்டுதல் எதிர்ப்பு விழிப்புணர்வு மாரத்தான்26.06.2026
திருவண்ணாமலை களப் பயணம்12.06.2026
முதல்வர் பதவியேற்பு விழா10.05.2026
போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம்21.06.2026
கருத்துகள்
Testimonial 1 of 6